கொரோனா வைரஸ் எதிர்த்து போராட பிரதமரின் பொது நிவாரண நிதி அளிக்க முன்வருமாரு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார். தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் நிதி அளித்து வருகின்றனர்.
கிரிக்கெட் விளையாட்டு வீரரும் தற்போதைய பா.ஜ.,வின் எம்.பியுமான கவுதம் காம்பீர் தன்னுடைய எம்.பி., பதவியின் ஒரு மாத ஊதியத்தை நன்கொடையாக அளித்திருந்தார். தொடர்ந்து எம்.பி.,தொகுதிமேம்பாட்டுநிதியில் இருந்தும் ஒரு கோடி ரூபாய் நதி அளித்திருந்தார்.
2 ஆண்டு சம்பளத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்தார் காம்பீர்